அயோத்தி பற்றி உணர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பிய கேரள இளைஞர்கள் 4 பேர் கைது
கொல்லம்: கேரளாவில் அயோத்தி நில விவாகரம் குறித்து உணர்ச்சியைத் துண்டும் வகையில் எஸ். எம். எஸ். அனுப்பிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் சர்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வெளியானதை முன்னிட்டு மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்பவும், இந்த பிரச்சனை தொடர்பாக உணர்ச்சியைத் தூண்டிவிடும் எஸ்.எம்.எஸ். அனுப்பவும் தடை விதி்க்கப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒச்சிரா என்ற இடத்தில் அயோத்தி நில விவகாரம் குறித்து உணர்ச்சியைத் துண்டும் வகையில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய 4 இளைஞர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த முயன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கேரளாவி்ல் உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்கள் நடந்து வருகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை வரை கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த கேரள அரசு தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications