அயோத்தி தீர்ப்பை வைத்து மத்திய அரசு அரசியல் செய்யாது-ப.சிதம்பரம்

அயோத்தி தீர்ப்பு குறித்து இன்று ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்புக்கு நாட்டு மக்கள் காட்டிய அமைதியான வரவேற்பு மிகவும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகும். அயோத்தி தீர்ப்பை மக்கள் மிகவும் கெளரவமான முறையில் எதிர்கொண்டுள்ளனர்.
நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார். அதை மக்கள் மதித்து அமைதி காத்துள்ளது பாராட்டுக்குரியது. மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும், நீதிமன்ற தீர்ப்பையும் மதித்து மக்கள் அமைதி காத்தனர்.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யப் போவதாக உரியவர்கள் அறிவித்துள்ளனர். அது இன்னும் சில நாட்கள் அல்லது வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் திருப்திகரமாக உள்ளது. எங்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் சில காலத்திற்கு நீடிக்கும்.
பாபர் மசூதி இடிப்புக்கும், அயோத்தி தீர்ப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அயோத்தி தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை.
அயோத்தி தீர்ப்பு தொடர்பாக மீடியாக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு செய்தி வெளியிடுகின்றன. அது தேவையற்றது. அதைத் தவிர்க்க வேண்டும்.
அயோத்தி தீர்ப்பை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. அப்படிப்பட்ட செயலை மத்திய அரசு ஒருபோதும் செய்யாது.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் தற்போதையே நிலையே இப்போதைக்கு நீடிக்கும் என்றார் சிதம்பரம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications