திமுகவுக்கு எதிராக அலை-இந்திய கம்யூனிஸ்ட், பாஜக
கந்தர்வகோட்டை& அறந்தாங்கி: தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலை மனத்தில் வைத்துக்கொண்டு இலவசம், இலவசம் எனக் முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், இந்த முறை தமிழ்நாட்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படுவது கருணாநிதியின் குடும்ப பணத்தில் அல்ல; மக்களின் வரிப் பணத்தில். ஆனால், இப்படி இலவசமாக அளிக்கப்படும் தொலைகாட்சிப் பெட்டிக்கான கேபிள் இணைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் முதல்வர் கருணாநிதி குடும்பத்தையே சென்றடைகிறது.
ஓர் இணைப்புக்கு ரூ.100 என வைத்துக்கொண்டாலும் தமிழகத்திலுள்ள 60 லட்சம் கேபிள் இணைப்புகளின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?.
வரும் தேர்தலில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர். முதல்வர் கருணாநிதியோ வரும் தேர்தலில் பண பலத்தால் வெற்றி பெறலாம் எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சி நீடித்தால் ஜனநாயகமே அழிந்து போய்விடும். இதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். கடந்த தேர்தலிலே திமுக வலுவான கூட்டணியை அமைத்தும் 91 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால், இப்போது சூழலே வேறு.
அன்று திமுகவுடன் இருந்த கட்சிகள் பலவும் இப்போது அதிமுகவோடு இணைந்து நிற்கின்றன. ஆகையால், அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார் பாண்டியன்.
திமுகவுக்கு எதிராக அலை-பாஜக:
பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச். ராஜா அறந்தாங்கியில் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளதைத் தெளிவாக உணர முடிகிறது.
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் முறை பென்னகரத்திலேயே எடுபடவில்லை. அங்கு இவ்வளவு செலவழித்தும் திமுக 45 சதவீத வாக்குகளையே பெற்றது. எதிர்கட்சிகள் வாக்குகள் சிதறியதாலேயே அங்கு திமுக வெற்றி பெற்றது.
ஆகவேதான் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தால் தோல்வி அடைவோம் எனக் கூறி கூட்டணி மாற வேண்டும் என இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகப் பேசி வருகிறார்கள் என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications