அண்ணா நூலகத்தில் 'நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்' வெடித்ததால் பரபரப்பு
சென்னை: சமீபத்தில் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பிரமாண்ட அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 மாடிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் தற்போது 3 மாடிகள் மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டு திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற தளங்கள் இன்னும் முடியவில்லை. வேலைகள் நடந்து வருகின்றன.
நேற்று 5வது தளத்தில் வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென பெரும் வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து அஹ்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர். வெடிகுண்டு வெடித்து விட்டதோ என்று பீதி ஏற்பட்டது
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் உள்ளிட்டோரும் விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்தில் தீவிரமாக ஆராய்ந்தபோது நான் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் என்ற டெட்டனேட்டர் வெடித்தது தெரிய வந்தது. இந்த டெட்டனேட்டர், பாறைகளை பிளக்கும்போது பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைக்க உதவும் பூஸ்டராக செயல்படுவது ஆகும்.
இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது 25 டெட்டனேட்டர்களைக் கொண்ட பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உடனடியாக அங்கிருந்துஅப்புறப்படுத்தி வேறு இடத்திற்குக் கொண்டு சென்று செயலிழக்க வைத்தனர். மேலும் ஜெலட்டின் குச்சிகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் ஆராயப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், மாலை 4 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு சிறு விபத்துதானே தவிர பெரிய சம்பவம் அல்ல. இதில் எந்த சதித்திட்டமும் இல்லை. இந்த பொருளை நான்-எலக்ட்ரிக் டெட்டனேட்டர் என்று அழைப்பார்கள்.
பாறை போன்றவற்றை வெடிக்கச் செய்வதற்கு, இதனை ஜெலட்டின் குச்சியோடு இணைத்தால், பெரிய அளவில் அந்த ஜெலட்டின் குச்சியை இது வெடிக்கச் செய்யும். ஆனால், இந்த டெட்டனேட்டர் கீழே விழுந்தாலும், காலில் மிதிபட்டாலும் வெடிக்கக்கூடியது.
இந்த பொருளின் மீது அங்கு நடந்து கொண்டிருந்த வெல்டிங் பணியினால் ஒரு தீப்பொறி பறந்து வந்து எதேச்சையாக இதன் மீது விழுந்துள்ளது. இதனால்தான் வெடிப்பு ஏற்பட்டு என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது.
இருப்பினும், இந்த டெட்டனேட்டர்களை யார், எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது பற்றி, கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்களிடம் விசாரித்து வருகிறோம்.
பொதுமக்கள் நூலகத்திற்கு வரலாம். அதில் அவர்களுக்கு எந்தத் தடங்கலும் இல்லை என்றார்.
அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திற்குள் டெட்டனேட்டர்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications