திமுக கூட்டணி வேண்டாம்-தங்கபாலுவை முற்றுகையிட்டு காங்கிரஸார் கோஷம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வந்தபோது அவரை சுற்றி முற்றுகையிட்ட காங்கிரஸார் (முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள்) வேண்டாம், வேண்டாம் திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் இன்று நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தங்கபாலு அங்கு வந்தார். அப்போது அவரை திமுகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கூடி தங்கபாலுவை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வேண்டாம், வேண்டாம் திமுக கூட்டணி வேண்டாம் என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் இது நீடித்ததால் தங்கபாலு கடும் டென்ஷனடைந்தார்.
இத்தனைக்கும் தங்கபாலுவுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடன் வந்திருந்தார். ஆனால் அவர் கோஷமிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சமாதானப்படுத்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கோஷமிட்ட தொண்டர்களை கண்டு கொள்ளாமல், அங்கிருந்து வெளியேறி தனது காருக்குப் போனார் தங்கபாலு. ஆனாலும் விடாமல் அவரைப் பின் தொடர்ந்து சென்று திமுக கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த சாலையில் உட்கார்ந்து திமுக கூட்டணி வேண்டாம் என்று கூறி சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications