தமிழகத்தில் நோக்கியா, பாக்ஸ்கான் விரிவாக்கத்துக்கு வாய்ப்பு! - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சீனா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று சீனா தலைநகர் பீஜிங்கில் ஆசிய- பசிபிக் மண்டலத்தின் நோக்கியா நிறுவன இயக்குனர் ஜெப் மர்கய்ஸ், பாக்ஸ்கான் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஜெசன் லீ ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் எங்களது நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் தமிழக அரசுக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூறுகையில், "இரண்டு நிறுவனங்களும் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் மிகுந்த வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால், உங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை தமிழ்நாடு உருவாக்கி கொடுக்க முடியும். அதோடு மட்டுமில்லாமல் உங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசு உருவாக்கித் தரும்'' என்று தெரிவித்தார்.
எனவே, தமிழ்நாட்டில் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கத் திட்டங்களை விரைவில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா நிறுவனம், உலகிலே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம்.
இதன் உற்பத்தி பிரிவு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 30 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
பாக்ஸ்கான், உலகிலே மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஹார்டுவேர் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம், நோக்கியா நிறுவனத்திற்கு பெரிய அளவில் உதிரி பாகங்களை சப்ளை செய்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனம் நேரடியாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications