4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன் பாய்ச்சல்

விருத்தாசலத்தில் தி.மு.க. அரசு சாதனை விளக்க பொதுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அன்பழகன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால், தி.மு.க. தான் பாரம்பரியமான திராவிட கட்சியாகும்.
அ.தி.மு.க. என்றால் ஜெயலலிதா, தே.மு.தி.க. என்றால் விஜயகாந்த் மட்டுமே கட்சியில் கருத்துகள் கூற முடியும்.
விருத்தாசலம் தொகுதியிலிருந்து வந்த எம்.எல்.ஏ -வை சட்டசபையில் பார்க்கவே முடியவில்லை. செய்தித்தாள்கள் மூலமாகத்தான் அரசுக்கு ஆலோசனைகளை கூறுகிறார். சினிமாவில் மட்டும் தான் அவரைப் பார்க்க முடிகிறது.
தி.மு.க.போன்று மற்ற கட்சிகளுக்கு மக்களிடம் நேரடி தொடர்பு இல்லை. அரசியல் வியாபாரத்திற்காக சிலர் கட்சி துவங்கி நாங்கள் தான் முதல்வர் என்கின்றனர்.
ராமதாஸ், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார். அதனால் தான் அவர் அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கிறார்.
அரசியலில் யாருக்கும் லட்சியமே இல்லை. எப்படியாவது நாலு இடம் கிடைச்சா அதை வைத்து அமைச்சராகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்த பகுதியில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமான திட்டக்குடி வெலிங்டன் ஏரியை மூன்று முறை தூர் வாரியது தி.மு.க. அரசு தான்.
ஏழைகளின் பசியைப் போக்க ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம், கான்கிரீட் வீடு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. இந்த திட்டங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் கிடையாது.
இன்று கல்வி, மருத்துவம், வீட்டு வசதி என பல துறைகளில் தமிழகம் முன்னேறுவதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்றார் அன்பழகன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications