பாக். தீவிரவாதி கசாப் புனே சிறைக்கு விரைவில் மாற்றம்
புனே: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீன் கசாப்பை, புனே, மரத்வாடா சிறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்னும் 2 மாதங்களில் அவனை புனே சிறைக்கு மாற்றி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
புனே கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள எரவாடா சிறையில் கசாப் அடைக்கப்படவுள்ளான்.
தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் கசாப். அவனுக்காகவே பிரத்யேகமாக வெடிகுண்டு வீச்சில் தகர்க்கப்பட முடியாத, குண்டு துளைக்காத அறையை கட்டி அங்கு அடைத்துள்ளனர்.
மிக பலத்த பாதுகாப்புடன் கூடிய இந்த சிறையிலிருந்து தற்போது கசாப்பை மாற்றவுள்ளனர். மும்பையில் அமைக்கப்பட்டு வரும் மோனோரயில் திட்டமே இதற்குக் காரணம். சிறை உள்ள பகுதியில் தற்போது இந்த ரயில் பாதை வருகிறது. ரயில் பாதையிலிருந்து பார்த்தால் சிறையை நன்றாக பார்க்க முடிகிறது. இது ஆபத்தானது என்பதால், கசாப்பை புனே சிறைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், ஆர்தர் சாலை சிறையில், விசாரணைக் கைதிகளைத்தான பெரும்பாலும் அடைப்பார்கள். தற்போது கசாப் தண்டனைக் கைதி ஆவான். எனவே தொடர்ந்து இங்கு அவனை வைத்திருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. எனவேதான் புனேவுக்கு மாற்றவுள்ளனர்.
புனே, மரத்வாடா சிறையில் உள்ள ஒரு சிறப்புப் பிரிவை மேம்படுத்தி அதை எந்த வகையான தாக்குதலையும் சமாளிக்கும் வகையிலான அறையாக மாற்றவுள்ளனர். அதன் பின்னர் அந்த சிறைக்கு கசாப் மாற்றப்படுவான்.
கசாப்பைப் பாதுகாக்க அரசு பல லட்சங்களை செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications