அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸி., நியூசிலாந்தில் புலிகளுக்கு 42 அலுவலகங்கள்-இலங்கை நிபுணர்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச கட்டமைப்பு எந்த வகையிலும் சிதறவில்லை, அப்படியே இருக்கிறது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் அவர்களுக்கு 42 அலுவலகங்கள் உள்ளன. அதை தடங்கலின்றி தொடர்ந்து செயல்படுகின்றன என்று இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு நிபுணர் ரோஹன் குணரத்னே என்பவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் ஆயுத பல ரீதியாக முற்றிலும் முடக்கப்பட்டு விட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு அப்படியே இருப்பது பெரும் கவலைக்குரியது என்றும் குணரத்னே கூறியுள்ளார்.
இதுகுறித்து இலங்கையின் போரினால் ஏற்பட்ட படிப்பினை கமிஷன் முன்பு ஆஜாகி அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பு 17 மாதங்களுக்கு முன்பு அடியோடு அழிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் சர்வதேச வலையமைப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. உண்மையில் சொன்னால், அப்படியே உள்ளது. நல்ல வலுவுடன் உள்ளது. இதைக் கலைக்க வேண்டியது மிக மிக அவசியம்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு 42 அலுவலகங்கள் உள்ளன. இவை பெரும் ஆபத்தாகும்.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க வீரர்களின் மன நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து அரசு கவலைப்படாமல் இருக்கிறது.
புலிகள் இயக்கத்திற்கு தொடர்ந்து நிதி சேகரிக்கப்பட்டு வருவது இன்னொரு பெரும் கவலைக்குரிய விஷயமாகும். பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் வேகமாக நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் இந்த குணரத்னே.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications