காவலர் தேர்வு-உயரத்தைக் கூட்டிக் காட்ட தலையில் பசை தடவி வந்த வாலிபர்
நெல்லை நெல்லையில் காவலர்களுக்கான முதல் கட்ட உடல் திறன் தேர்வு இன்று துவங்கியது. அப்போது உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக தலையில் பசை தடவி வந்த வாலிபர் பிடிப்பட்டார்.
நெல்லையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், (ஆண், பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2306 ஆண் மற்றும் 1001 பெண்களுக்கான முதற்கட்ட உடல் திறன் தேர்வு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
நேற்று நடந்த தேர்வில் 800 ஆண்கள், கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு, ஓட்டம் ஆகியவை நடந்தன. சென்னை டிஐஜி சஞ்சய் மத்தூர், நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் மேற்பார்வையில், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
தேர்வுகளை பதிவு செய்ய சுழற்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் காலை 6 மணிக்கு மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பங்கேற்க வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது உயரம் குறைவாக இருக்க கூடாது என்பதற்காக தலையில் பசை தடவி வந்தார். இதனை பார்த்த எஸ்பி ஆஸ்ரா கர்க் அவரை பிடித்து வெளியே நிறுத்தினார். அதன்பிறகு அவர் தேர்வுக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
இதே போல் வேறொருவரின் போட்டோவை ஓட்டி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலை சேர்ந்த வாலிபரும் பிடிபட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications