தமிழகத்தில் ஆட்டோ, கால்டாக்சி கட்டணம் உயரும்
சென்னை: ஆட்டோ, கால்டாக்சி கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நலவாரியத்தின் ஐந்தாவது கூட்டம் சென்னையிலந நடந்தது.
இதில் போக்குவரத்துத்துறை அமைச்சரும், வாரியத் தலைவருமான கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை ஆணையர் (பொறுப்பு) தங்கசாமி, தொழிலாளர் ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நேரு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால்,2007ல் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் கால்டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வருடன் கலந்து பேசி ஆட்டோ, கால்டாக்சி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
ஆட்டோக்கள் மற்றும் கால்-டாக்சிகளை கேஸ் மூலம் இயக்குவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications