சென்னை கடத்தல் கும்பலுக்கு உடந்தை-2 கொச்சி விமான நிலைய அதிகாரிகள் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கொச்சி வழியாக சென்னைக்கு ரூ.30 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தப்பட்டது தொடர்பாக கொச்சி விமான நிலைய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 கோடி மதிப்புள்ள கடத்தல் எலக்ட்ரானிக் பொருட்களை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் கடந்த 3 தினங்களாக விடிய விடிய அதிகாரிகள் சோதனை நடந்தது. அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பயணிகள் போல சிங்கபூர் செல்லும் ஆசாமிகள் எலக்ட்ரானிக் பொருட்களை அங்கிருந்து கடத்தி வந்து சுங்கத் துறை ஊழியர்களின் ஓத்துழைப்போடு வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். கடந்த 4 மாதத்தில் மட்டும் சிங்கபூர், துபாய், ஆகிய நாடுகளில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த இப்ராகீம், அப்துல் கரீம், பாஷா மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஆகிய 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து கொச்சி வருவாய் புலனாய்வு அதிகாரிக் நடத்திய விசாரணையில் அங்குள்ள விமான நிலைய சுங்கதுறை அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்கிவிட்டு கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் பிரசாந்த், டிஎஸ் பிள்ளை ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications