பஞ்சு ஏற்றுமதியில் மத்திய, மாநில அரசு இரட்டை வேடம்-சிபிஎம் கண்டனம்
நாகர்கோவில்: பஞ்சு ஏற்றுமதி விவகாத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இரட்டை வேடம் போடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தனியார் பள்ளிகளில் கட்டணம் தொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிக்கையை அரசு உடனடியாக அமல் படுத்தியிருந்தால் இந்த பிரச்னை கோர்ட்டுக்கு சென்றிருக்காது. இப்போது பள்ளிகளில் பெற்றோர்கள் போராட்டம் நடத்தும் நிலையும் வந்திருக்காது. நீதி கேட்டு போராடும் பெற்றோர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பஞ்சு ஏற்றுமதி பிரச்னையில் மாநில அரசும், மத்திய அரசும் இரட்டை வேடம் போடுகிறது. பஞ்சு ஏற்றுமதி என்று சொன்ன உடனேயே நூல் விலை உயர்ந்து விட்டது. திருப்பூரில் நூல்விலை காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவை போல பொது விநியோக திட்டத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்க அரசு முன்வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள குழு அறிக்கும் பரிந்துரையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போன்று, நெய்யாறு இடதுகரை சானல் பிரச்னையை இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டு வரும் கொலை மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மக்கள் பிரச்னைக்காக மார்க்சிஸ்ட் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துகிறது. இதில் தே.மு.தி.க -வும் பங்கேற்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications