''என் கிணத்தை காணாம்.. என் கிணத்தை காணாம்..''!
மதுரை: காணமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காமெடி காட்சி வரும். அதை மக்களும் ரசித்து சிரித்தனர்.
ஆனால், நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியில் நடைபெற்றுள்ளது.
சின்னுப்பட்டிச் சேர்ந்த பாஸ்கரன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு இருந்து வந்தது. இதை பல ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த கிணற்றை சட்ட விரோதமாக மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி உள்ளனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அதே நபர்கள் 49 சென்டு வண்டி பாதையாகிய பொது நடைபாதையை ஆக்கிரமிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த செயலை மறைக்க, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களை திருத்த முயச்சி செய்து வருகின்றனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காணாமல் போய் விட்ட பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications