குமரி-லால்குடியில் பஸ் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பயணிகள் தவிப்பு
நாகர்கோவில் & திருச்சி: அரசு பஸ் டிரைவர் வெட்டப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
குமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் செல்வம் (37). இவர் பெருவழிகடவில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் பஸ்சை ஓட்டி சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் பஸ்சில் ஏறி செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து நாகர்கோவில் ராணித்தோட்டம், குழித்துறை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய இடங்களில் உள்ள அரசு பஸ் டெப்போக்களுக்கு நேற்று காலை வந்த ஊழியர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ்கள் இயங்காமல் பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
டிரைவர் செல்வத்தை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் அறிவித்த பின்னரே ஊழியர்கள் பஸ்களை இயக்கினர்.
கண்டக்டரை டிக்கெட் பரிசோதகர் தாக்கியதால் ஸ்டிரைக்:
இதற்கிடையே லால்குடி அருகே கண்டக்டரை டிக்கெட் பரிசோதகர் தாக்கியதை கண்டித்து பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மக்களை வதைத்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (50), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக லால்குடி டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து களத்தில் வென்றார்பேட்டை என்ற ஊருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
லால்குடி அருகே அந்த பஸ் சென்றபோது டிக்கெட் பரிசோதகர்கள் சந்திரசேகரன், மோகன் ஆகியோர் அந்த பஸ்சில் ஏறி சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பயணியிடம் பழைய டிக்கெட் இருந்தது. இதைத் தான் கண்டக்டர் தந்ததாக அந்த பயணி கூற, அதை கண்டக்டர் மறுத்தார்.
கூறினார்.
இதையடுத்து கண்டக்டர் தட்சிணாமூர்த்திக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தட்சிணாமூர்த்தி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் தட்சிணாமூர்த்தியை டிக்கெட் பரிசோதகர் தாக்கிவிட்டதாகக் கூறி பஸ் கண்டக்டர்கள் டிரைவர்கள் மருத்துவமனையில் கூடினர். பஸ்களை இயக்க மறுத்தனர்.
இதனாலம மக்கள் பஸ்கள் இல்லாமல் 3 மணி நேரம் தவித்தனர். டிக்கெட் பரிசோதகர் சந்திரசேகர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்த பின்னரே ஊழியர்கள் போராட்டத்தை கைவுட்டு பஸ்களை இயக்கினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications