சிபிஐ விசாரணை: மனைவி-மகனுடன் தொழிலதிபர் தற்கொலை
சென்னை: சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த தொழிலதிபர் தனது மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். இரண்டரை மாத குழந்தைக்கும் விஷம் கொடுத்ததில் அந்தக் குழந்தையும் உயிருக்குப் போராடி வருகிறது.
சென்னை கிண்டி பச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முகமது இஸ்மாயில் சதக் (38). பழைய இரும்பை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இன்று காலை அவர் தனது மனைவி ஷபீன், மகன் முகம்மத் ஈசா (3) ஆகியோருடன் கட்டிலில் பிணமாக கிடந்தார். அருகில் இரண்டரை மாதமே ஆன பச்சிளம் குழந்தை இஸ்ரா பாத்திமாவும் வாயில் நுரை தள்ளிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தது.
குழந்தையை சதக்கின் தந்தை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இஸ்மாயில் சதக், மனைவி, குழந்தைகளுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இஸ்மாயில் சதக்குக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதோடு கடன் தொல்லையாலும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களாக ஒரு வழக்கு தொடர்பாக இஸ்மாயில் சதக்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை மிரட்டியதாகவும் இதன் காரணமாகவே, இஸ்மாயில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications