தூத்துக்குடி அருகே 4200 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடி அடுத்த கயத்தாறில் 4200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள கயத்தாறு மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் எரிசாராயம் இருப்பதாக கயத்தாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, உடனே கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நம்பி , சப்-இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி மற்றும் கயத்தாறு போலீசார் மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், செந்தூர்பாண்டி மகன் தென்னரசு என்பவரின் தென்னை தோட்டத்தில் உள்ள ஒரு அறையில், 120 கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த எரிசாயம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 120 கேன்களில் சுமார் 4200 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து தோட்ட உரிமையாளர் தென்னரசு மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications