தனியார் கான்ட்ராக்டர்கள் நீக்கம்... மணல் விலை லோடுக்கு ரூ 1000 வரை குறைந்தது!
சென்னை: மணல் குவாரி காண்டிராக்டிலிருந்து தனியார் நீக்கப்பட்டதால் லோடு விலையில் ரூ 1000 வரை குறைந்தது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடக்கும் கட்டுமானப்பணிகளுக்கு பாலாற்றின் மணல்தான் பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்ட மக்கள் தாமிர பரணி ஆற்றின் மணலை கொண்டு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
கடந்த மாதம் மணல் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு லாரி மணல் (2 யூனிட்) ரூ. 5000, ரூ. 5500 என்று விற்கப்பட்டது. இதனால் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளி தனியார் முதலாளிகள் மணல் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இயந்திரம் மூலம் மணல் அள்ள தடை விதித்தது. பாலாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக் கூடாது என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மணல் குவாரிகளில் தனியார் முற்றாக அகற்றப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை நடந்து வருகிறது.
இதன் காரணமாக மணல் விலை குறைந்துள்ளது. இதுவரை ரூ 5500 வரை விற்கப்பட்ட ஒரு லாரி மணல், இப்போது ரூ. 4,500க்கு விற்கப்படுகிறது. அரசின் உத்தரவை தொடர்ந்து மணல் விலை ரூ. 1000 குறைந்துள்ளது.
இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இயந்திரம் மூலம் மணல் 2 இடங்களில் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது பாலாற்றில் 4 இடங்களில் மணல் விற்பனை செய்யப்படுவதால் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விரைவாக எடுத்துச் செல்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications