Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிப்பு!

Subscribe to Oneindia Tamil

Fonseka
கொழும்பு: சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகாவின் எம்பி பதவியையும் பறித்துள்ளது இலங்கை அரசு.

இதனை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

30 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க கித்துலேகொட இலங்கை தேர்தல் ஆணையாளர்களுக்கு இன்று பிற்பகல் அறிவித்தார்.

பொன்சேகாவின் இடத்தில், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜே வி பியின் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதனை ஏற்காத ஜேவிபி, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் செல்கிறது.

"சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்ட விரோத செயல்" என, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ராணுவ நீதிமன்றம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் பதவி பறிப்பு போன்றவற்றில் இறஙஅகுவது ஆபத்தானது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது ஜேவிபி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+