சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து-4 பேர் கவலைக்கிடம்
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள சில்லையநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சிவகாசி அருகே உள்ளது சில்லைய நாயக்கன்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான முருகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலை கட்டிடத்தில் பட்டாசு மருந்துகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் மேற் கூரையை மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடு பட்டனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்ததில் தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நான்கு பேருக்கும் உடலில் 80 சதவீதம் தீக் காயம் ஏற்பட்டுள்ளதால், மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தகவலறித விருதுநகர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பிரபாகரன், சிவகாசி தாசில்தார் சாந்தி, டி.எஸ்.பி முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்னதர்.
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி , சில்லையநாயக்கன்பட்டி , பட்டாசு ஆலை , வெடி விபத்து, கவலைக்கிடம்,












Click it and Unblock the Notifications