தூத்துக்குடி புதிய கலெக்டராக மகேஸ்வரன் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக மகேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த பிரகாஷ் கடந்த 28 ம் தேதி மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய கலெக்டராக சென்னை உணவு வழங்கல் துறை இணை ஆணையர் மகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் 20 வது புதிய கலெக்டராக மகேஸ்வரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாவட்ட வருவாய் துறை அலுவலர் துரை. ரவிச்சந்திரன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தின்
வளர்ச்சிப் பணிகளில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications