அமைச்சர் 'ஆப்சென்ட்'-மக்கள் கொந்தளிப்பு-சாலை மறியல்!

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த செம்பேடு ஊராட்சியில் 409 பயனாளிகளுக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழாவிற்கு அமைச்சர்கள் வராததால், விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் ஆவேசம் அடைந்து சாலை மறியல் செய்தனர்.

செம்பேடு ஊராட்சியில் இலவச கேஸ் வழங்கும் விழாவிற்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் பயனாளிகளுககு இலவச கேஸ் அடுப்பு வங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவிக்கப்பட்டபடி அமைச்சர்கள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் வரவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் விழா ரத்து செய்யபட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் இரண்டு கி.மீ தூரம் நடந்து சொன்று ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி வீட்டை முற்றுகையிட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் பொது மக்களை சமாதானம் செய்தனர்.

விரைவில் இலவச டி.வி மற்றும் கேஸ் வழங்கப்படும் என தாசில்தார் பழனி, டிஎஸ்பி மகேந்திரவர்மன் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதி அளித்தை அடு்துத பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+