நக்சலைட்கள் தாக்குதலில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் பலி
கட்சிராலி (சட்டிஸ்கர்): சட்டிஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி பழங்குடியினருக்கான பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவருக்கும் வயது 10 மற்றும் 11 ஆகும். இதனால் சட்டிஸ்கரில் பதட்டம் நிலவுகிறது.
மகாராஷ்டிர-சட்டிஸ்கர் எல்லைப் பகுதியில் உள்ள சவர்கான் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில் இந்த இரு அப்பாவி மாணவர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 10 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் மூன்று பாதுகாப்புப் படையினர், பள்ளி பெண் ஊழியர், ஒரு கிராமவாசி ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கூறுகையில், நக்சலைட்கள் வீசிய கிரெனேட் வகுப்பறைக்குள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றார்.












Click it and Unblock the Notifications