நோபல் வென்ற சீன அரசின் அதிருப்தியாளர் லியூவின் மனைவி பெய்ஜிங்கிலிருந்து வெளியேற்றம்
பெய்ஜிங்: அமைதிக்கான நோபல் பரிசு பெறதேர்வு செய்யப்பட்டுள்ள சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடி வரும் லியூ ஜியாபோவின் மனைவி லியூ ஜியா தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். ஜியாபோ சிறை வைக்கப்பட்டுள்ள ஜின்ஷோ நகருக்கு அவர் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது.
11 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லியூ. இந்தநிலையில்அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படுவதாக நேற்று நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்தது. இதனால் சீன அரசு கடும் கோபமடைந்துள்ளது.
இந்த நிலையில்தான் லியூவின் மனைவி பெய்ஜிங்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். வட கிழக்கில் உள்ள ஜின்ஷோ நகரில் உள்ள சிறையில்தான் லியூ அடைக்கப்பட்டுள்ளார். அங்கு ஜியா கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரை வீட்டுக் காவலில் வைக்க சீன அரசு உத்தரவிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஜியாவை வலுக்கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றிருப்பது சீன ஜனநாயக இயக்கங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜியாவின் பெய்ஜிங் வீடு முன்பு நூற்றுக்கணக்கானோர் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Click it and Unblock the Notifications
