ஆசியாவின் சிறந்த நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி தேர்வு!

Euromoney Institutional investor Plc என்ற அமைப்பின் துணை நிறுவனம்தான் இந்த எமர்ஜிங் மார்க்கெட்ஸ். ஆசிய அளவில் இந்த ஆண்டுக்கான சிறந்த நிதி மந்திரி விருதை யாருக்கு அளிக்கலாம் என்பது குறித்து சமீபத்தில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது.
அரசு மற்றும் தனியார் பிரிவுகளைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள், ஆய்வாளர்கள், வங்கித் துறையினர், முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல் இடத்தை பிடித்து ஆசிய அளவில் சிறந்த நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது, பங்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது, தனியார் துறையினரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டது மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் ஆகியவை பிரணாப் முகர்ஜியின் சாதனைகள் போன்றவையே பிரணாப் முகர்ஜிக்கு இந்த சிறப்பினை பெற்றுத் தந்ததாக கூறப்பட்டுள்ளது.
1984-ல் உலகின் சிறந்த நிதியமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications