கேரளாவில் எய்ட்ஸ் சிகி்ச்சை அளித்த போலி டாக்டர் கைது
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகி்ச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் பிபி ரோடு அருகே உள்ள பகுதியில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது ஒரு டாக்டர் சிகிச்சை அளித்து வந்தார். அவர் போலி டாக்டர் என பெரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த டாக்டரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த ஜூனாயி அப்சின் எனவும், 10-ம் வகுப்பு கூட படிக்காதவர் என்று்ம் தெரிய வந்தது.
இவர் அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். குறிப்பாக எய்ட்ஸ் நோய்க்கு சிகி்ச்சை அளிப்பதாகக் கூறி பலரை ஏமாற்றியதும் தெரிய வந்தது. விசாரணையின்போது அப்சின் முர்ஷிதாபாத்தில் நர்சிங் படித்ததற்கான சான்றிதழ் ஒன்றை காண்பித்தார். ஆனால் அதுவும் போலி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications