ஓடும் பஸ்சில் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்- கத்திக்குத்து: 4 பேர் காயம்- 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் நந்தனம் கலைக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் மூண்டது. இதில் மாணவர்கள் கத்திகளால் தாக்கிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மோகன், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சென்னை மந்தைவெளியில் இருந்து அம்பத்தூருக்கு மாநகர போக்குவரத்து கழக பஸ் 41டி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அண்ணாநகர் புளு ஸ்டார் நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது சில கல்லூரி மாணவர்கள் ஏறினர். அப்போது ஏற்கனவே பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்களுடன் அவர்களுக்குத் தகராறு ஏற்பட்டது.
முதலில் அடிதடியில் இறங்கிய மாணவர்கள், திடீரென கத்திகளால் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.
இதில் 4 மாணவர்களுக்கு கத்திக் குத்து விழுந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது, பிற பயணிகள் இறங்கி ஓடினர்.
தகவல் அறிந்து அண்ணாநகர் உதவி கமிஷனர் மதி தலைமையில் போலீஸ் படை வந்தது. அதற்குள் மாணவர்கள் தப்பியோடிவிட்டனர்.
கத்திக் குத்தில் காயமடைந்த சுரேஷ் (19), சனத்குமார் (19), அஸ்வின் (20), உமாபதி (20) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மோகன், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications