விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் தேமுதிக நிர்வாகிகளுக்கு கல்தா - விஜயகாந்த் அதிரடி
மதுரை : விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு பதில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை...
திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த வி.எஸ். திருப்பதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக திவ்யா எம்.ரெங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடன் இணைந்து செங்கோட்டை எம்.கண்ணன், கே.முத்துக்குமார், ஏ.பி.காமராஜ், வெ.சோலை கனகராஜ், க.இன்பராஜ் ஆகியோர் செயல்படுவார்கள்.
மேலும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த எஸ்.என்.மருதையன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக த.லோ.பரமசிவம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தே.மு.தி.க. புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கோ.ராமதாஸ் நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்ட உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த ஆர்.சுப்பராயலு மற்றும் எம்.எஸ்.உதயகுமார் ஆகியோர் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications