பெண் போலீசை கற்பழித்த வாலிபர் கொலை: கணவர், நண்பர் கைது
சென்னை: சென்னையில் பெண் போலீஸை கற்பழித்த வாலிபரை அந்தப் பெண்ணும், அவரது கணவர், நண்பர் ஆகியோர் கொலை செய்தனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த சஜாத் அலி ஷேக் (28).
கடந்த 2ம் தேதி இரவு முதல் இவரை காணவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர் தாகிர் திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் நேற்று மாலை போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் சஜாத் அலியின் பிணம் மிதந்தது. அவரது முதுகில் கத்திக்குத்து காயம் இருந்தது. உடலின் பல இடங்களில் அடித்து உதைத்ததற்கான காயங்களும் இருந்தன.
இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடினர். விசாரணையில் ஆவடியைச் சேர்ந்த அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகியோர் சி்க்கினர்.
அன்வர்ராஜாவும் ஆவடியில் ஹோட்டல் வைத்துள்ளார். இவரது கடையில் தான் சஜாத் அலி முதலில் வேலை பார்த்துள்ளார். அன்வர்ராஜாவின் நண்பரான அசோக்குமாரின் வீட்டு மாடியில் வாடகைக்கு இருந்துள்ளார்.
அசோக்குமாரின் மனைவி கவிதா (32) பூந்தமல்லியில் காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவரை சஜாத் அலி பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி அறிந்த அசோக்குமார் தனது நண்பரான அன்வர்ராஜா, மனைவி ராதாவுடன் சேர்ந்து சஜாத் அலியை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆவடிக்கு கடத்திச் சென்று கத்தியால் குத்தியும் அடித்து உதைத்தும் கொலை செய்துவிட்டு பிணத்தை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றிச் சென்று போரூர் கால்வாயில் வீசியுள்னர்.
இதை வாக்குமூலமாகவே மூவரும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications