ஆன்மீக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு சீனா அழைப்பு

சீனாவில் புத்தமதம் பெருமளவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், அரசைப் பொருத்தவரை, மதங்கள் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாக இருக்கிறது என்ற கருத்து உள்ளது. இதனாலேயே பல மத இயக்கங்களை அந்த நாடு தடை செய்துள்ளது. ஆனாலும் சமீப காலமாக, மத விஷயத்தில் அத்தனை கடுமை காட்டுவதில்லை சீனா.
இந்நிலையில், சீன அரசின் 'வெளிநாடு வாழ் சீன நணபர்கள் சங்க'த்தின் சார்பில் வரும் அக்டோபர் 24- 25ம் தேதிகளில் பெய்ஜிங்கில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள வருமாறு ரவிசங்கருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், சீனாவின் பெரிய வர்த்தகர்களுள் ஒருவரான டாங்க் க்யூ.
இந்த நிகழ்ச்சிக்கான முழு செலவையும் அவரே ஏற்றுள்ளார். இவர் ரவிசங்கரின் தீவிர பக்தராம். கடந்த முறை பெங்களூர் வந்திருந்த அவர், ரவிசங்கருக்கு படு சொகுசான ஒரு ரிசார்டை பரிசளித்துள்ளார்.
ஏற்கெனவே ரவிசங்கரின் சீடர்கள் சிலர் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரங்களில் உள்ள 12 முக்கிய சீன குருக்களுக்கு இந்தியாவின் யோகக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications