இப்போது நடந்தது செமி பைனல்தான்-பைனலில் நாங்களே வெல்வோம்:காங்.
பெங்களூர்: இப்போது நடந்திருப்பது செமி பைனல்தான். இதில் பாஜக வென்றுள்ளது. ஆனால் அக்டோபர் 18ம் தேதி நடக்கப் போகும் இறுதிப் போட்டியில் நாங்கள்தான் வெல்வோம் என்று கூறியுள்ளார் கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அவர் கூறுகையில், 16 பேரை சட்டவிரோதமாக தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர்.
16 பேரையும் நீக்கியது சட்டவிரோதமானது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இன்று நடந்துள்ளது அரை இறுதிப் போட்டிதான். ஆனால், இறுதிப் போட்டி அக்டோபர் 18ம் தேதிதான். அதில் எங்களுக்கே வெற்றி கிடைக்கும். இந்த ஆட்சி நீடிக்காது, நிலைக்காது என்றார் சித்தராமையா.
பாஜக அரசு வீழ்ந்தே தீரும்-குமாரசாமி:
தற்போதைய அனைத்து அமளிகளுக்கும் மூலகாரணமான மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறுகையில், இப்போது நடந்துள்ளது நம்பிக்கை வாக்கெடுப்பே அல்ல. இது சட்டவிரோதமானது. இந்த அரசு பதவியில் நீடிக்கத் தகுதியே இல்லை. 16 பேரை தகுதி நீக்கம் செய்ததாக கூறி விட்டு பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த அரசு வீழ்ந்தே தீரும். அதில் சந்தேகமே வேண்டாம். அக்டோபர் 18ம் தேதிக்குப் பிறகு அரசு இருக்காது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications