பொங்கல்-சில நிமிடங்களிலேயே காலியானது ரயில் டிக்கெட்கள்
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இப்போதெல்லாம் விசேஷ காலங்களின்போது ரயில்வே டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகிறது. ஆன்லைன் புக்கிங் வந்ததால் இந்த நிலை.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாள்கள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 12-ம் தேதியன்றே சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்யக் காத்திருந்தனர்.
ஜனவரி 12-ம் தேதிக்கான 90 நாள்களுக்கு முந்தைய முதல்நாள் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கியதும் நெல்லை, பொதிகை, பாண்டியன், முத்துநகர், அனந்தபுரி போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததன.
சில ரயில்களில் ஏசி வகுப்புக்களுக்கான டிக்கெட்டுகள் குறைந்த எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்படாமல் இருந்தன.
இதுவும் கூட இன்றைக்குள் நிரம்பி விடும் எனத் தெரிகிறது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்று விட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். வழக்கம் போல சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications