கடன், நஷ்டம், வறுமையால் ஆந்திராவில் பருத்தி விவசாயி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கரீம்நகர்: கடன் மற்றும் நஷ்டத்தால் ஏற்பட்ட வறுமையால் மனம் உடைந்து ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் பருத்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

சமீபத்தில் பெய்த மழையால் ஆந்திர விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் பல விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஒரு பக்கம், நஷ்டம் ஒரு பக்கம் அத்தோடு வறுமையும் உடன் சேரவே அவர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் கரீம் நகர் அருகே உள்ள சீர்லவச்சா கிராமத்தைச் சேர்ந்த வெங்கபள்ளி ராமா ரெட்டி என்ற 31 வயது விவசதாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இது போக ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பருத்தி பயிரிட்டிருந்தாதர். ஆனால் கன மழையால் அத்தனை பயிரும் சேதமடைந்து போய் விட்டது.

இந்த இழப்புக்காக அரசிடமிருந்து அவருக்கு எந்த இழப்பீடும் கிடைக்காததால் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+