நெல்லையில் 743 பேருக்கு ரூ.12.79 கோடி கல்விக் கடன்: சபாநாயகர் வழங்கினார்
நெல்லை: நெல்லை மாவட்ட மாணவ, மாணவியர் 743 பேருக்கு ரூ. 12.79 கோடி கல்விக் கடனை சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்கினார்.
நெல்லை மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அதற்கு ஆட்சியர் ஜெயராமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 743 பேருக்கு ரூ.12.79 கோடி கல்விக் கடன் வழங்கி சபாநாயகர் ஆவுடையப்பன் பேசியதாவது,
நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக அரசும், வங்கிகளும் சேர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றது.
நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கினாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி, தொழிற்கல்வி பயில நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.31 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வியை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் ரூ.53 ஆயிரம் கோடி மதிப்பிலான அன்னிய முதலீட்டில் கார் தொழிற்சாலை, உதிரி பாகத் தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த தொழிற்சாலைகளில் நம் வீட்டு பிள்ளைகள் பலரும் பணிபுரிகின்றனர். பணிபுரியவும் போகின்றனர். கல்விக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் அலைக்கழிக்க கூடாது. கல்விக்கு உதவும் மனோபான்மையுடன் வழங்க வேண்டும்.
அதே போல மாணவர்களும் பெற்ற கடனை உரிய காலத்திற்குள் வங்கியில் செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும், அரசிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications