பெங்களூரில் நெல்லை பெண் இன்ஜினியர் கொலை: உறவினர் சிக்குகிறார்
நெல்லை: பெங்களூரில் கொல்லப்பட்ட நெல்லை பெண் இன்ஜினியர் கொலையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி அவரது நெருங்கிய உறவினர் எனவும், ஒருதலை காதலால் அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும், கொலையாளியை 2 நாளில் கைது செய்து விடுவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் இன்ஜினயர் மலர்விழி. இவர் கணவர் பாலசுப்பிரமணியத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். கடந்த 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மலர்விழி மர்ம நபரால் கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனையி்ல் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானது தெரிய வந்தது.
தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளியைப் பிடிக்க பெங்களூர் தனிப்படை போலீசார் சென்னை, நெல்லை விரைந்தனர். குறிப்பாக நெல்லையில் முகாமிட்டு அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
கொலையாளி மாஜி காதலனா அல்லது கல்லூரித் தோழனா என்ற சந்தேகம் வலுத்த நிலையில் தற்போது மலர்விழியின் நெருங்கிய உறவினர்தான் கொலையாளி என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீ்ஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சம்பவத்தன்று மலர்விழியின் வீட்டுக்கு பெற்றோருடன் சென்றதாக கூறப்படும் நபர் மலர்விழியின் காதலனாக இருந்தாலும் அவர் நெருங்கிய உறவினராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. திருமணம் முடிந்த பின் பெற்றோருடன் வந்தாலும் மாஜி காதலனை சந்திக்க மலர்விழி விரும்பி இருக்க வாய்ப்பில்லை. எனவே கொலையாளி நெருங்கிய உறவினர் தான் என்று நம்புகின்றனர்.
தற்போது அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், நெல்லையில் இருந்து தனிப்படை போலீசார் நாகர்கோவில் விரைந்துள்ளதாகவும், எனவே கொலையாளி நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications