தவறான புள்ளிவிவரம் தருகிறார் பிரதமர்! - நிதீஷ் குமார் காட்டம்
பாட்னா: பீகாருக்கு நிதி ஒதுக்கிய விவகாரத்தில், தவறான புள்ளி விவரங்களை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் பிரதமர் மன்மோகன் சிங், என்று நிதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் லாலு, நிதிஷ்குமார் தலைமையிலான கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்ட தேர்தல் நெருங்குவதையொட்டி, பீகாரில் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நர்பாத்கஞ் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "சிறுபான்மையினருக்காக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களை முதல்வர் நிதிஷ்குமார் உரிய முறையில் செயல்படுத்தவில்லை. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தோல்வி அடைந்துவிட்ட நிதிஷ்குமார், மத்திய அரசு திட்டங்களுக்கு பெருமைத் தேடிக்கொள்ள முயலுகிறார். பீகாரில் மின்சாரம், சாலை வசதி, நீர்பாசன வசதிகள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆண்டு தோறும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி வருகிறது.
வளர்ச்சியின்மை, வேலையின்மை, வறுமை ஆகியவற்றை எந்தக் கட்சியின் அரசால் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்பதை பீகார் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பீகாரில் கடந்த 20 வருடங்களாக காங்கிரஸ் அல்லாத அரசுகளால் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற காங்கிரசுக்கு வாக்களியுங்கள்", என்றார்.
மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் திட்டங்களை பீகார் அரசு அமல்படுத்தவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதை அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மறுத்துள்ளார்.
மேலும் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, பீகார் அரசு தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் எனக்கு வியப்பை அளிக்கின்றன. இவை முற்றிலும் பொய்யானவை.
பிரதமர் கூறுவதுபோல் 2004ம் ஆண்டு முதல் அந்த நிதி பீகாருக்கு வழங்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே 2002ம் ஆண்டு முதல் அந்த நிதி பீகாருக்கு வழங்கப்பட்டு வருகிறது; மேலும் அது சிறப்பு நிதியும் அல்ல..." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications