கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் வழக்கு : நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு - வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் இரண்டாவது முறை வென்றபோதிலும் அரசு இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை.
தங்கள் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 16 எம்.எல்.ஏ.-க்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அது இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த 16 எம்.எல்.ஏ.-க்களில் 11 பேர் பாஜகவினர், 5 பேர் சுயேட்சைகள். இதில் பாஜக எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கேஹர் சிங் மற்றும் நீதிபதி என். குமார் ஆடங்கிய பெஞ்ச்சில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் தலைமை நீதிபதி சபாநாயகர் செய்ததற்கு ஆதரவளித்துள்ளார். ஆனால் நீதிபதி மோகன் சபாநாயகரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து 11 பாஜக எம். எல்.ஏ.-க்களின் வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை மூன்றாவது நீதிபதி ஒருவர் விசாரிப்பார் என்று அந்த பெஞ்ச் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 5 சுயேட்சை எம்.எல்.ஏ.-க்களின் வழக்கை அடுத்த மாதம் 2-ம் தேதி ஒத்திவைப்பதாக அந்த பெஞ்ச் மேலும் தெரிவித்தது. இந்த வழக்கை வேறொரு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்பதற்கு 2 நபர் பெஞ்ச் ஒப்புதல் அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications