சென்னையில் 8 வயது சிறுவன் கடத்தல்-15 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
சென்னை: சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை போலீஸார், 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.
சிறுவனின் உறவினர்களே பணத்திற்காக இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி 6வது தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சசிகலா. இவர்களது ஒரே மகன் ஆனந்த். 8 வயதான ஆனந்த் அதே பகுதியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆனந்த், புதன்கிழமை மாலை டியூஷனுக்குச் சென்றான். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் மாதவரம் காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுத்தனர். போலீஸார் அவர்களை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தருமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து கொடுங்கையூரில் புகார் கொடுக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். இந்த நிலையில், சிவக்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரூ. 5 லட்சம் கொடுத்தால் சிறுவனை விடுவதாக கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன் பின்னர் போன் ஏதும் வரவில்லை. இதனால் சிறுவனின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில் இரவில் மீண்டும் செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறினார். சிவக்குமாரும், அவரைப் பின் தொடர்ந்து போலீஸாரும் சென்றனர். ஆனால் பின்னர் எழும்பூர் வருமாறும், தொடர்ந்து பாரீஸ் கார்னர் வருமாறும் அலைக்கழித்தது கடத்தல் கும்பல்.
இந்த நிலையில் சிவக்குமாரைத் தொடர்பு கொண்ட கும்பல், ஜோலார்ப்பேட்டைக்கு பணத்துடன் வந்தால் சிறுவனை மீட்கலாம் எனக் கூறியது. இதையடுத்து ஜோலார்ப்பேட்டைக்கு பணத்துடன் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார் சிவக்குமார்.
மறுபக்கம், அழைப்பு வந்த செல்போன் எண் எந்தப் பகுதியில் உள்ளது என்பதை செல்போன் டவர் சிக்னல் மூலம் போலீஸார் விசாரித்தனர். அதில், அக்கும்பல் ஜோலார்ப்பேட்டை நோக்கி காரில் போய்க் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேலூர் அருகே போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். பள்ளிகொண்டா அருகே கடத்தல் கும்பல் காருடன் வந்தபோது அங்கு வைத்து போலீஸார் அவர்களை மடக்கினர். அப்போது சிலர் காரிலிருந்து குதித்துத் தப்பி விட்டனர். சிலர் மட்டும் பிடிபட்டனர். சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான்.
இந்தத் தகவல் சிவக்குமாருக்குத் தெரிவிக்கப்பட அவர் ஆனந்தக் கண்ணீருடன் பள்ளிகொண்டா விரைந்து வந்து மகனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தார்.
தற்போது கடத்தல் கும்பலையும், சிறுவனையும், போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் செயலில் சிவக்குமார் உறவினர்கள் சிலரே ஈடுபட்டுள்ளதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பணத்துக்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications