ஓடும் விமானத்தில் பெண்ணிடம் விஷமம்-61 வயது இந்தியருக்கு சிறை
வாஷிங்டன்: விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தூங்கிய பெண்ணின் ரகசிய இடத்தில் கையை வைத்து சில்மிஷம் செய்ததாக 61 வயதான இந்திய வம்சவாளியைச் சேர்ந்த அமெரிக்கரைப் போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபரின் பெயர் ரன்சோத்பாய் லகா. ஜார்ஜியாவின் அல்பரேட்டாவைச் சேர்ந்தவர். இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர். இவர் செப்டம்பர் 28ம் தேதி டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில், டல்லாஸிலிருந்து அட்லான்டா சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு அருகில் பயணித்த 20 வயதுப் பெண் தூங்கும்போது அவரது இடுப்புக்குக் கீழே கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதைப் பார்த்து விழித்த அந்தப் பெண், லகாவின் கையைத் தட்டி விட்டார். ஆனாலும் விடாத லகா, மீண்டும் கையை வைத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் எழுந்து நின்று விமான ஊழியர்களின் உதவியை நாடி குரல் கொடுத்தார்.
பின்னர் விமானம் தரையிறங்கியதும் லகாவைப் போலீஸார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் நிறுத்தினர். ஏற்கனவே அலபாமாவிலும் இதுபோல லகா நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்து எப்பிஐ விசாரித்து வருகிறது.
தற்போது லகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 2.50 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications