கொசு மருந்து கரும்புகையால் சிறுமியின் முகம் கருகியது
சென்னை: கொசு மருந்து அடிக்கும் வண்டியின் பின்னால் ஓடிய சிறுமியின் முகம், புகை பட்டு கருகிப் போனது.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வண்டி மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
ஆர்.கே. நகர் 1-வது தெருவில் கொசு மருந்து வண்டி சென்றபோது அங்குள்ள சிறுவர், சிறுமியர் வண்டிக்குப் பின்னால் ஒடினர். அவ்வாறு ஓடியவர்களில் ஒருவர் செல்வம் என்பவரின் மகள் லத்திகா (7). கொஞ்ச தூரம் ஓடிய அவள் திடீரென்று முகத்தைப் பிடித்துக் கொண்டு அலறினாள்.
அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுமியின் முகம் கருகியிருந்தது. உடனே சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து லத்திகாவின் தந்தை செல்வம் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து துறை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் புகார் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அவர்கள் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொசு மருந்து வண்டியில் இருந்து வந்த கரும் புகை, அனல் பறக்க வந்ததால்தான் சிறுமியின் முகம் கருகியதாகவும் எனவே கொசு மருந்து வண்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications