திருமணத்தை நிறுத்துமாறு 17 வயது மாணவி மகளிர் ஆணைய தலைவியிடம் மனு
கிருஷ்ணகிரி: தனக்கு நடக்கவுள்ள கட்டாயத் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 17 வயது மாணவி மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியனிடம் நேரில் மனு கொடுத்தார்.
இதையடுத்து இந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும், இந்த மாணவி அரசு விடுதியில் தங்கிப் படிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தால் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவான நிலுவை வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மகளிர் நல ஆணையத் தலைவர் சற்குணபாண்டியன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் அருண் ராய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவுல் நிருபர்களிடம் பேசிய சற்குணபாண்டியன், கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்புடைய 13 நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் முன்று வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன.
இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஜீவா தனது தாய் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறும் மனு கொடுத்தார்.
இந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும், இந்த மாணவி அரசு விடுதியில் தங்கி படிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இளம் வயது திருமணங்களைத் தடுப்பது குறித்து இந்த மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. கிராமசபை கூட்டங்கள் மூலமாகவும் ஊர் பெரியவர்கள் மூலமாகவும், சமுக நலத்துறை பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications