போடி மலையில் நியூட்ரினோ ஆய்வகம்-மத்திய அரசு அனுமதி

மத்திய அணு சக்தித் துறை இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ளது. இதற்காக போடி மலைப் பகுதியில் ஒரு ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்.
உலக அளவில் அமையும் 5வது நியூட்ரினோ ஆய்வுக் கூடமாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுத்தமாக எடையே இல்லாத கண்ணுக்குத் தெரியாத மிக நுன்னிய துகள்தான் இந்த நியூட்ரினோ. இதை ஆவி துகள் என்றும் அழைக்கிறார்கள். காரணம் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நுன்னியதாக இருப்பதால்.
தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் 26 அமைப்புளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றவுள்ளனர். இதற்காக இந்திய நியூட்ரினோ அப்சர்வேட்டரியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக மலைப் பகுதியில் மிகப் பெரிய சுரங்கம் தோண்டப்படவுள்ளது. இங்கு 55,000 டன் எடை கொண்ட எலக்ட்ரோ மேக்னட் கருவியை நிறுவி அதன் மூலம் ஆய்வுகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய நியூட்ரினோ அப்சர்வேட்டரியின் மதுரைப் பிரிவு தலைவர் டாக்டர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் கூறுகையில், விண்ணில் பெருமளவில் வியாபித்திருக்கும் மிகச் சிறிய துகள்தான் நியூட்ரினோ.
சூரியனும், பிற நட்சத்திரங்களும் பெருமளவிலான நியூட்ரினோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சேருவதில்லை. அப்படி சேருவது என்பது மிக மிக அரிதான செயலாகும். அனைத்துப் பொருட்கள் வழியாகவும் இது ஊடுறுவிச் செல்லும் தன்மை கொண்டது.
1000 மீட்டர் அடர்த்தி கொண்ட இயற்கையான பாறைப் பகுதியை நாங்கள் ஆய்வுக்குரிய பகுதியாக தேர்வு செய்துள்ளோம். இதன் மூலம் இந்தக் கடினப் பாறை வழியாக நியூட்ரினோ துகள்களைத் தவிர வேறு எதுவும் ஊடுறுவி வர முடியாது என்பதால் இதைத் தேர்வு செய்துள்ளோம்.
நியூட்ரினோ ஆய்வு, பிரபஞ்சம் மற்றும் பூமியின் அமைப்பு, எரிமலைகளின் செயல்பாடு, சுனாமி அலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த புதிய ஆய்வுகளுக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications