பிரதமர், சோனியாவைத் தொடர்ந்து அமைச்சரவைச் செயலாளரும் கல்மாடியைப் புறக்கணித்தார்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மத்திய அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரும், காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியை புறக்கணித்து அவமதித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் முடிந்த கையோடு அது தொடர்பான ஊழல்களை விசாரிக்கத் தொடங்கி விட்டன மத்திய அரசின் ஏஜென்சிகள். இதையடுத்து கல்மாடியை அரசுத் தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் ஒதுக்கி வைத்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியின்போது கல்மாடிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுக்காமல் புறக்கணித்தார். அதேபோல பதக்கம் வென்றவர்கள் சோனியாவை சந்தித்த நிகழ்ச்சிக்கும் கல்மாடி அழைக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவைச் செயலாளர் சந்திரசேகரும் கல்மாடியைப் புறக்கணித்துள்ளார். அவர் காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக ஒரு நன்றி கூறும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், துணை நிலை ஆளுநர் தேஜேந்தர் கண்கணா, பல்வேறு போட்டி தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் கல்மாடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
விருந்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லும் கலந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications