நெல்லை-தீபாவளி திருட்டுக்காக 50 பீகார் பெண் கொள்ளையர்கள் ஊடுறுவல்
நெல்லை: தீபாவளி பண்டிகையை ஓட்டி நெல்லையில் 50க்கும் மேற்பட்ட பெண் கொள்ளையர்கள் ஊடுருவி உள்ளனராம்.
நெல்லையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல்வேறு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில் பீகாரை சேர்ந்த கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இவர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து பெரிய கடைகளை நோட்டமிட்டு தங்கள் திட்டத்தை நிறைவேற்றி வந்தனர். இதே போல் இந்த ஆண்டும் பெரிய கடைகளில் கொள்ளையடிக்க பீகார் கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையொட்டி நெல்லை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநகரில் உள்ள ஜவுளி, நகைகடைகளின் உரிமையாளர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை நெருங்குவதால் கடைகளுக்கு இரவு நேர காவலர்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications