ஓ.எஸ்.மணியன் வந்த கார் மீது மற்றொரு கார் மோதல்-2 பேர் பலி-மணியன் தப்பினார்
திருவாரூர்: மயிலாடுதுறை அதிமுக எம்.பி. ஓ.எஸ்.மணியன் வந்த கார் மீது இன்னொரு கார் மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மணியன் காயத்துடன் உயிர் தப்பினார்.
நெல்லை மாவட்டம், கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் டேவிட்பொன்ராஜ் (30). இவரது தம்பி ஜெபராஜ் (26). மைத்துனர் அன்புராஜ் (30). இவர்கள் 3 பேரும் காரைக்கால் அருகே நெடுங்காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் ஊருக்கு நேற்று திரும்பிக்கொண்டிருந்தனர். காரை நெல்லை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த ஜெபராஜ் (30) என்பவர் ஓட்டி வந்தார்.
திருவாரூர் அருகே ஊர்குடி மடப்புரம் என்ற இடம் அருகே சென்றபோது, தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யுமான ஓ.எஸ்.மணியன் வந்த காரின் மீது டேவிட்பொன்ராஜ் வந்த கார் பயங்கரமாக மோதியது.
விபத்தில் ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். டேவிட்பொன்ராஜ், ஜெபராஜ், அன்புராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உடனே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே டேவிட்பொன்ராஜ் இறந்தார்.
விபத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.பி., அவரது காரில் பயணம் செய்த நாகை நகரசபைத் தலைவர் சந்திரமோகன் மற்றும் வெற்றியழகன், முத்துமகாலிங்கம், டிரைவர் குமார் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.
அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications