பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை-டிச. 2ல் திறக்கப்படுகிறது
பாரீஸ்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த மறைந்த சுப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை, தமிழ்ச்செல்வன் மறைந்த டிசம்பர் 2ம் தேதி திறக்கப்படுகிறது.
உலக போரியில் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவுதூபிகளையும் இருந்த இடம்தெரியாது இலங்கை அரசின் ராணுவம் சிதைத்தழித்துவரும் நிலையில், பிரான்சின் லாகூர்நெவ் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.
சுப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லா கூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2007ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் லா கூர்நெவ் நகரசபை, தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து மிகப் பிரமாண்டமாக தமிழ்க் கிராமம் என்ற நிகழ்வு ஒன்றை நடத்தியது. அதில் பிரான்சில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டன.
அந்நிகழ்வுக்கு லா கூர்நெவ் நகரசபை எமது சமாதான தூதுவராக இருந்த சுப.தமிழ்ச்செல்வனை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். அவ்வேளையில் தாயகத்தில் பிரச்சினை காரணமாக வர முடியாது என்றும், அன்றைய நாளில் தொலைபேசி மூலமாக வாழ்த்துக் கூறுவதாகவும் சுப.தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய நாளே அவர் வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார். லா கூர்நெவ் நகரசபை தலைவர் அன்றைய நாளில் அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தை செலுத்தி நிகழ்வுகளை நடத்தினார்.
தற்போது சுப.தமிழ்ச்செல்வனி மூன்றாமாண்டு நினைவு நாள் அன்று அவருக்கான நினைவுச் சிலையினை அமைக்க லா கூர்நெவ் நகரசபை ஏற்கனவே அவரது நினைவாக நடப்பட்டுள்ள மரத்திற்கு அருகில் இடம் ஒதுக்கித் தந்துள்ளது.
லா கூர்நெவ் தமிழ்ச்சங்கமும் Le sens de l"art (la galerie) இணைந்து சுப.தமிழ்ச்செல்வனின் சிலையினை அமைத்து வருகின்றனர்.
இதையொட்டி நவம்பர் மாதம் முதலாம் நாள் லா கூர்நெவ் நகர சபை முன்னால் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications