கர்நாடகா-ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் ஐடி ரெய்டு

ரெய்ட் நடத்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்களில் ஒருவர் சுரேஷ்பாபு. இவர் காம்ப்ளி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இன்னொருவரான நாகேந்திரா கூடலகி தொகுதி எம்.எல்.ஏ ஆவார். இவர்கள் இருவரும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டிக்கு மிகவும் நெருங்கியவர்கள் ஆவர்.
பெல்லாரி, பெங்களூர், ஹோஸ்பேட்டை, காம்ப்ளி ஆகிய இடங்களில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 60 இடங்களில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
ரெய்டுக்குள்ளான மூன்றாவது நபர் அலி கான் என்பவர். இவர் ஜனார்த்தன ரெட்டியின் தனி செயலாளர் ஆவார். இவரது வீடும், அலுவலகமும் சோதனைக்குள்ளானது.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக அரசைக் காப்பாற்றும் முயற்சிகளில் ரெட்டி சகோதரர்களின் பணம் பயன்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.
ஆந்திர-கர்நாடக எல்லைப் பகுதியில், சட்டவிரோத சுரங்கத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர் ரெட்டி சகோதரர்கள். இதன் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக கோடி கோடியாக சம்பாதித்து வருவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது,. ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டியும், கருணாகர ரெட்டியும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களது உறவினரான ஸ்ரீராமுலுவும் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications