அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ 46 லட்சம் கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்கள்! - மன்மோகன் சிங்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மன்மோகன் சிங், டோக்கியோவில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்துக்கு இந்தியாவிலிருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, பார்தி ஏர்டெல்லின் சுனில் பார்தி மிட்டல், ஃபோர்டிஸ் தலைவர் மல்விந்தர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மன்மோகன் சிங், "இந்தியாவில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி வரும் 5 ஆண்டு (2012-2017) திட்டத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவே 1 ட்ரில்லியன் டாலர் (ரூ 46 லட்சம் கோடி) செலவிடத் தீர்மான்க்கப்பட்டுள்ளது.
இதில் ஜப்பானின் பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறோம். இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை தக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபடும். ஒருமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.
இப்போது இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7.4 சதவீதமாக உள்ளது. கடந்த 2008-2009-ல் ஆண்டு 6.5 சதவீதமாக இருந்தது. 2010-2011-ல் 8.5 சதவீதமாகர வளர்ச்சி இருக்கும். 2011-1012-ல் இது 9 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். இந்த வளர்ச்சி சாத்தியமா என்ற கேள்வி எழலாம்.
உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைப்பாட்டை நீக்கினாலே போதும், இந்த வளர்ச்சி சாத்தியமே.
அதற்காகத்தான் ரூ 46 லட்சம் கோடி செலவில் பல நவீன சாலை மேம்பாடு, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதிகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதில் அரசுத் துறையை விட, தனியாரின் பங்கு முக்கியமானது என கருதுகிறேன். ஜப்பானிய நிறுவனங்கள், இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதில் கை கோர்க்க வேண்டும் என அழைக்கிறேன்" என்றார்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications