சட்ட மேலவை தேர்தலுக்குத் தடை கோரி திண்டிவனம் ராமமூர்த்தி வழக்கு
Subscribe to Oneindia Tamil

தமிழக தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருக்கும் திண்டிவனம் ராமமூ்ர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டம் 169-வது பிரிவின்படி தமிழ்நாட்டில் மேல்- சபை அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
தற்போது மேல்- சபை தேர்தலுக்கு தொகுதி வரையறை செய்ததற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கும் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
அவ்வாறு ஒப்புதல் பெறாமல் தமிழக மேல்- சபை தேர்தலை நடத்தக்கூடாது. ஒப்புதல் பெறும்வரை அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications