திருப்பூர் அருகே பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு-23 பேர் காயம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொழுமம் பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 23 பேர் படுகாயமடைந்தனர். பஸ்கள், கடைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
வயல்கள், தோட்டங்களுக்குள் ஊடுறுவும் காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விரட்டுவது விவசாயிகளின் வழக்கம். திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில் விவசாயிகளுக்கு வெடிகுண்டுகளை சப்ளை செய்து வரும் ஒரு நபர் நாட்டு வெடி குண்டுகளை டிராக்டரில் போட்டுக் கொண்டு இன்று சென்றார்.
பஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர் வந்தபோது டிராக்டரில் இருந்த ஒரு வெடிகுண்டு பை கீழே விழுந்து விட்டது. அந்த பை மீது டிராக்டர் ஏறிய அடுத்த விநாடி, பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் 6 பெண்கள், 4 மாணவர்கள் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அங்கு நின்றிருந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன கடைகளிலும் சேதம் ஏற்பட்டது. குண்டுவெடித்ததைத் தொடர்ந்து மக்கள் அலறி அடித்து ஓடினர். கடைகள் அடைக்கப்பட்டன.
காயமடைந்தவர்கள் உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஒரு பெண் மட்டும் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications